விமான நிலையத்துக்குள் கடும் பொலிஸ் பாதுகாப்பு!!
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், பயணிகள் வருகைதரும், வெளியேறும் பிரிவுகளின் கணினிகள் செயலிழந்து உள்ளன. இன்று (09) காலை 9 மணியளவில் திடீரென செயலிழந்துவிட்டன என திணைக்களத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனால் விமான நிலையத்தின் விமானப் பயணிகளால் நெரிசல் ஏற்பட்டுள்ளது. அவற்றைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக, (Manual System) ஊடாக பதிவுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதனால் தங்களுடைய தேவைகளைப் பூர்த்திச் செய்துக்கொள்வதற்காக, கட்டுநாயக்க விமான நிலையத்தின் பிரதான காரியாலயத்துக்கு வருகைதரும் விமானப் பயணிகள், அமைதியற்ற முறையில் நடந்துகொள்கின்றனர்.
இதனையடுத்து அந்தப் பிரிவுக்குள் பொலிஸார் அழைக்கப்பட்டு, பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
விமான நிலையத்துக்குள் செயலிழந்துள்ள கணினிகளை சீர் செய்வதற்கான முயற்சிகளில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் அதிகாரிகள் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
குடிவரவு மற்றும் குடியல்வு திணைக்களத்தின் கணினிகள் நேற்று (08) செயலிழந்து விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.