எத்தனை பொய்கள்? எத்தனை நடிப்புக்கள்? எத்தனை காட்டிக் கொடுத்தல்கள்? (யாழில் இருந்து கனடா வரை) -முகநூல் பதிவு-
எத்தனை பொய்கள்? எத்தனை நடிப்புக்கள்? எத்தனை காட்டிக் கொடுத்தல்கள்? (யாழில் இருந்து கனடா வரை) -முகநூல் பதிவு-
பொருளாதாரத் தேடலுக்காக எத்தனை பொய்கள்? , எத்தனை நடிப்புக்கள்/ காட்டிக் கொடுத்தல்கள்? எத்தனை தேசத்துரோகங்கள் ?.
இத்தனைக்கும் பின்னர், வெள்ளைக்காரன் இந்தப்பிச்சைக்கு இரங்கி கருணை காட்டினால், போன நாட்டில் அடிமையாய்க் கிடந்து இங்கு தொடவே மாட்டாத பல வேலைகளையும் செய்து, பின்னர் நாட்டுக்கு மினரல் வோட்டர் போத்தலோடும் ஜம்பரோடும் வந்து.. .
10 லட்சம் பெறாத காணியை 30 லட்சப்படி வாங்கி, வருடத்தில் ஒரு வாரம் வந்து நிற்க பத்துக்கோடியில் பதினாறு கமெரா பூட்டிய வீட்டைக்க கட்டி, இங்கு உழைப்பவன் சாகும்வரை வீடுவாசல் வாங்க முடியாதபடி கொழுப்பால் காணி விலையேற்றி, அங்கு சாமத்தியப்பட்ட தமிழ்கூடத் தெரியாத குமரை ஐந்து வருசத்தால் இங்கு கொண்டுவந்து ஹெலிஹொப்டரில் இறக்கி சாமத்திய வீட்டைக் கொண்டாடி..
“காசைப் பற்றி பிரச்சினையில்லை எனக்குத் தரம் முக்கியம்” என்று (பழைய பஞ்சத்தை மறந்து😜) மேசன் முதல், டெய்லர் வரை எல்லோரையும் ஏத்திவிட்டு..அவனை “உள்ளூர் ஆளெண்டாலே ஓடர் எடுக்கிறேல்ல” எண்டு சொல்ல வச்சு,…
நமது உள்ளூர் பொருளாதார சமநிலை கெடுத்து, இங்கே வெளிநாட்டுக் காசிலேயே தங்கி வாழும் சோம்பேறிகள் கூட்டம் ஒன்றையும் உருவாக்கி..
வேலை வெட்டி இல்லாது சுற்றும் பதின்ம வயது எருமை மாட்டு மருமகனுக்கு ஐபோன் புறோ மக்ஸ் உம். மோட்டார் சைக்கிளும் கிழமைக்கு ஒருக்கா..பார்ட்டி போடக் காசும் அனுப்பி.. ( பாவம் படிக்கிற பெடியன்..) விடும் நீண்டகால, எதிர்கால சிந்தனையற்ற, படிப்பறிவோ அல்லது பகுத்தறிவோ அற்ற திடீர்ப் பணக்கரார்களால் ஒரு தேசத்தின் பொருளாதாரக் கட்டமைப்பே சீரழிவது இப்படித்தான்.
இப்படி எந்த தொழில் – கல்வித்தகமையுமின்றி எல்லாவகையான அற மீறல்களின் மூலமாக வெளிநாடு சென்று புதிதாகக் காசு பார்த்த சிலரால் தான் யாழ்ப்பாணம் பல வகையிலும் இன்று நாறிக் கிடக்கிறது. (பொறுப்புள்ள வெளிநாட்டுக்காறர்களை இங்கு குறிப்பிடவில்லை. )
Credits : Satkunanathan Manimaran (FB)
****வெளிநாடு சென்று – பழையதை மறக்காமல், நாடு திரும்பும்போது நற்கருமங்களை பொறுப்புடன் ஆற்றி , பலரின் முறையான வளர்ச்சிக்கு காரணமாக இருக்கும் நல்லமனம் படைத்த புலம்பெயயர்நதவர்களை இக்கட்டுரை குறிப்பிடவில்லை.****