வீட்டில் வளர்த்த நாயின் கண்ணை தோண்டிய மர்மநபர்- கடும் நடவடிக்கை எடுக்க மந்திரி உத்தரவு..!!
கேரள மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்த ஆசிரியை துர்கா மாலதி. இவர் வீட்டில் நாய் வளர்த்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த நாய் காணாமல் போனது. ஆசிரியை நாயை தேடிவந்த நிலையில் அந்த நாய் மீண்டும் வீட்டுக்கு வந்தது. அப்போது நாயின் கண்கள் தோண்டப்பட்டிருந்தன.யாரோ மர்ம நபர்கள் நாயின் கண்ணை தோண்டியுள்ளனர். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ஆசிரியை போலீசில் புகார் செய்தார். போலீசார் நாயின் கண்களை தோண்டியவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே கேரள கால்நடை துறை மந்திரியும் இச்சம்பவத்தை கண்டித்ததோடு, இதில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவித்து உள்ளார்.