வீதியை புனரமைக்குமாறு சங்கானையில் போராட்டம்!! (PHOTOS)
யாழ்ப்பாணம் மானிப்பாய் ஊடான காரைநகர் வீதியை புனரமைக்குமாறு கோரி சங்கானையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பல வருடங்களாக குறித்த வீதி புனரமைக்கப்படவில்லை எனவும் மழை காலங்களில் வீதியால் போக்குவரத்து செய்ய முடியாத நிலைமை காணப்படுத்தாகவும் அதனால் வீதியை புனரமைத்து தருமாறு நீண்டகாலமாக அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையிலையே இன்றைய தினம் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.