மின் கட்டண அதிகரிப்பு அவசியம்!!
அடுத்த வருடம் முதல் 24 மணித்தியால மின்சார விநியோகத்தை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ள காரணத்தால், கட்டணத்தை அதிகரிக்காமல் தொடர் மின்சார விநியோகத்தை நடைமுறைப்படுத்த முடியாது என்று மின்சார சபையின் தலைவர் நளிந்த இலங்ககோன் தெரிவித்தார்.
மின்சார சபை பாரிய நிதி நெருக்கடியை எதிர்நோக்கி வருவதாக தெரிவித்த அவர், சபையின் செலவுகளை ஈடுகட்டுவதற்கு மின் கட்டண அதிகரிப்பை மேற்கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
மின்சார சபை குறைந்த விலையில் ஓர் அலகு மின்சாரத்தை வழங்குவதாலும், செலவுகளின் அதிகரிப்புக்கு ஏற்ப 2013 ஆம் ஆண்டு முதல் முறையாக மின் கட்டணத்தை அதிகரிக்காததாலும் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவும் மின்சக்தி அமைச்சும் இணைந்து மின் கட்டண உயர்வை செயல்படுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மின் உற்பத்திக்கு தேவையான நிலக்கரி, திட்டமிட்டபடி முற்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் நிலக்கரிக்கு எந்த பிரச்னையும் இல்லை என்றும் தலைவர் குறிப்பிட்டார்.