மகிந்த பிறப்பித்த அதிரடி உத்தரவு!!
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளானவர்களுக்கு வேட்புமனுக்களை வழங்க வேண்டாம் என முன்னாள் அதிபரும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மகிந்த ராஜபக்ச பொதுஜன பெரமுனவிற்கு அறிவித்துள்ளமை கட்சி உறுப்பினர்களுக்கு பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களிடம் விண்ணப்பங்களை கோருவதற்கு பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளதால், பொதுஜன பெரமுனவின் தலைவர் மகிந்த இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.
அத்துடன், இந்த விண்ணப்பங்களை பரிசீலிக்கும் போது, அரசியலில் கிராம மக்களுடன் இணைந்து நடைமுறையில் செயற்பட்டுள்ளாரா என்பதுடன் கல்வியிலும் முதன்மை கவனம் செலுத்துமாறு மகிந்த அறிவித்துள்ளார்.
மேலும், இந்த விடயங்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டுமென பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச கட்சித் தலைவர்களுக்கு அறிவித்துள்ளார்.
எப்படியிருப்பினும் மகிந்தவை சுற்றியிருப்பவர்கள் அனைவரும் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்குள்ளானவர்கள் என்பதனால் உறுப்பினர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இந்த உறுப்பினர்கள் அனைவரும் மகிந்தவுடன் அனைத்து காலப்பகுதியிலும் இணைந்து செய்யப்பட்டவர்கள் என கூறப்படுகின்றது.
குறிப்பாக எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் திறமையான இளம் பிரதிநிதிகளை முன்வைப்பதில் அதிக கவனம் செலுத்த பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது.
பொதுஜன பெரமுன உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பான விண்ணப்பங்களை தனித்தனியாக ஆராயவும் தீர்மானித்துள்ளது.