ஆசிரியர் தாக்கப்பட்ட சம்பவம் ; அறிக்கை கோரும் இராஜாங்க அமைச்சர்!!
பூனாகல பகுதியிலுள்ள ஆசிரியரொருவர் பாடசாலைக்குள் வைத்து வெளியாட்களால் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் >அறிக்கை ஒன்றை ஒரு வாரத்திற்குள் தனது கவனத்திற்கு கொண்டு, வருமாறு கல்வி இராஜாங்க அமைச்சர் அ. அரவிந்தகுமார் கோரியுள்ளார்.
மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு இது தொடர்பில் அவசரக் கடிதமொன்றை அனுப்பி, இக்கோரிக்கையை விடுத்துள்ளார்.
ஹல்தும்முல்ல பிரதேசசபையின் தவிசாளரால் தாக்கப்பட்ட குறித்த ஆசிரியர் தியத்தலாவை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், குறித்த பாடசாலையின் ஆசிரியர்கள் தற்போது பணிபகிஷ்கரிப்பையும் முன்னெடுத்து வருகின்றனர்.
எனவே, மேற்படி சம்பவம் தொடர்பாக ஒரு வாரத்திற்குள் முழுமையான அறிக்கையை தனது கவனத்திற்கு கொண்டு வருமாறு அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இக்கடிதத்தின் பிரதிகள் ஜனாதிபதி ,பிரதமர் ,கல்வி அமைச்சர் ,ஊவாமாகாண ஆளுனர் , கல்வி அமைச்சின் செயலாளர், ஊவாமாகாண கல்விப்பணிப்பாளர், வலயக் கல்விப் பணிப்பாளர் ,பாடசாலை அபிவிருத்திச்சங்க செயலாளர் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளன.