;
Athirady Tamil News

கொவிட் நிலமை குறித்த உலக சுகாதார அமைப்பின் முக்கிய தீர்மானம்!!

0

கொவிட் -19 தொற்றுநோய் இனி உலகளாவிய அவசரநிலையாக கருதப்படாது என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் கெப்ரேயஸ் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

ஜெனீவாவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கொவிட்-19 வைரஸ் 2020 ஆம் ஆண்டில் பொது சுகாதார அவசரநிலையாக பிரகடனப்படுத்தப்பட்டது.

சீனாவின் ஹூபே மாகாணத்தின் வூஹானை மையமாகக் கொண்டு, 2019 ஆம் ஆண்டின் இறுதியில் இந்த வைரஸ் தோற்றியதாக கருதப்படுகிறது.

இந்த நிலையில், 2020 ஆம் ஆண்டு கொவிட்-19 வைரஸ் உலகளாவிய தொற்றுநோயாக மாறியது.

வெற்றிகரமான தடுப்பூசி செலுத்துகை ஊடாக கொவிட் -19 வைரஸின் தீவிரம் குறைக்கப்பட்டதன் மூலம், வைரஸ் அச்சம் படிப்படியாக குறைந்துள்ளது என்றும் உலக சுகாதார அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.