பூநகரி கிராஞ்சி கடலட்டை பண்ணைகளுக்கு எதிரான ஆர்ப்பாட்டம்!! (படங்கள்)
கிளிநொச்சி பூநகரி கிராஞ்சியில் அமைக்கப்பட்டுள்ள கடலட்டை பண்ணைகளுக்கு எதிரான கடற்றொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் இன்று (16-12-2022) வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம் ஆரம்பமாகி ஆளுநர் செயலகம் வரை பேரணி இடம்பெற்றது.
குறித்த போராட்டத்தினை கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு மாவட்ட மீனவ ஒத்துழைப்பு இயக்கம்,வடமராட்சி கிழக்கு பிரஜைகள் குழு, கிராமிய உழைப்புச் சங்கம் ஆகியன இணைந்து நடத்தியிருந்தனர்.
யாழ். மத்திய பேருந்து நிலையம் முன்பாக காலை 10.30 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போராட்டம் வடமாகாண ஆளுநர் செயலகத்தில் நிறைவடைந்தது.
இந்த போராட்டத்தின் நிறைவில் வடமாகாண ஆளுநர் செயலகம், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, கடற்றொழில் அமைச்சர் ஆகியோருக்கு மகஜர் கையளிக்கப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,செல்வராசா கஜேந்திரன், தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்க பிரதிநிதிகள், யாழ். மாவட்ட கடற்றொழிலாளர்கள் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசங்களின் சம்மேளனத் தலைவர் அன்னலிங்கம் அன்னராசா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”