;
Athirady Tamil News

சீக்கியர்களை என்கவுண்டர் செய்த வழக்கு: 43 உ.பி. போலீஸ்காரர்களுக்கு தண்டனையை குறைத்தது ஐகோர்ட்..!!

0

உத்தரபிரதேச மாநிலம் பிலிபிட் மாவட்டத்தில் கடந்த 1991-ம் ஆண்டு நடந்த என்கவுண்டரில் பயங்கரவாதிகள் என நினைத்து 10 சீக்கியர்களை போலீசார் சுட்டுக்கொன்றனர். இது தொடர்பான வழக்கை விசாரித்த சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம், 47 போலீஸ்காரர்களுக்கு கடந்த 2016-ம் ஆண்டு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதில் இடைப்பட்ட காலத்தில் 4 பேர் உயிரிழந்துவிட்ட நிலையில், இந்த தண்டனைக்கு எதிராக அலகாபாத் ஐகோர்ட்டின் லக்னோ அமர்வில் மேல்முறையீடு செய்யப்பட்டது. விசாரணையின் முடிவில், 43 போலீசாருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து செய்து 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கொடுங்குற்றத்தை செய்ததால் ஒருவரை கொல்வது போலீசாரின் கடமை அல்ல என்றும், தவறு செய்தவர்களை கைது செய்து கோர்ட்டில் ஒப்படைக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.