இனப்பிரச்சினை தீர்வு பேச்சு – வெற்றி பெறுவதற்கான சாத்தியங்கள் குறைவு!!
தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் முன்னெடுத்துள்ள பேச்சுவார்த்தை வெற்றி பெறுவதற்கான சாத்தியங்கள் குறைவாக காணப்படுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
எனினும் பேச்சுவார்த்தை காலப்பகுதியில் தமிழ் மக்களின் பிரச்சினைகளை ஒரளவிற்குள் தீர்த்துக் கொள்ள திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார்.
அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் உள்ள தமிழரசு கட்சியின் வட்டாரக்கிளை நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் ஆதரவாளர்களுடனான விசேட கலந்தரையாடல் நேற்று திருக்கோவில் விநாயகபுரத்தில் இடம்பெற்றது.
இதன்போது கிழக்கு மாகாண தமிழர்களின் பிரச்சினைகள் அரசியல் இருப்புக்கள் காணி விடுவிப்புக்கள் உள்ளிட்ட பல்வேறுபட்ட விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன.
கலந்துரையாடல் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், தவராசா கலையரசன், இராசமாணிக்கம் சாணக்கியன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு இருந்தனர்.
இதன்போது உரையாற்றிய சுமந்திரன் அதிபருடனான பேச்சுவார்த்தைகள் தொடர்பாக கருத்து வெளியிட்டார்.