புங்குடுதீவு நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொட்டகை அமைக்கப்பட்டது!! (படங்கள் இணைப்பு)
புங்குடுதீவு கண்ணகை அம்மன் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள நன்னீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் ஊர்காவற்துறை தொகுதி செயலாளரும் வேலணை பிரதேச சபை உறுப்பினருமான திரு. கருணாகரன் நாவலன் அவர்களின் முயற்சியில் பாதுகாப்பு கொட்டகை அமைக்கப்பட்டுள்ளது. நாவலன் அவர்களின் ரூபாய் 30000 நிதியுதவியிலும், புங்குடுதீவு பிரதேச சபை உப அலுவலகத்தின் ஊழியர்கள், கடற்படையினரின் சரீர ஒத்துழைப்புடனும் மேற்படி செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. மேற்படி நிலையத்தின் மின்சார கட்டண நிலுவையும் ( ரூபாய் 33000 ) ஏற்கனவே கருணாகரன் நாவலன் அவர்களின் தனிப்பட்ட நிதியுதவியில் செலுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேற்படி நன்னீர் சுத்திகரிப்பு நிலையத்தின் ஊடாக தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் பயனடைந்துவருகின்றனர்.