தேர்தலுக்காக ஐஸை பற்றி பேசுகிறார்கள்!!
ஐஸ் போதைப்பொருளை தேசிய மட்டத்தில் ஒழிக்க வேண்டுமாக இருந்தால், இந்த போதைப்பொருள் வர்த்தகத்தில் உள்ள அரசியலை ஒழிக்க வேண்டுமென தெரிவிக்கும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி, அடுத்த தேர்தலில் வாக்குக் கேட்கவே ஐஸ் போதைப்பொருளை அரசாங்கம் கையில் எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
”ஐஸ் போதைப்பொருளை நாட்டுக்கு அரசியல்வாதிகளே கொண்டு வருகிறார்கள். அவர்களே அதனை நாடு முழுவதிலும் விநியோகிக்கிறார்கள். பாடசாலை மாணவர்களிடம் ஐஸ் இருக்கிறதா என அவர்களே சோதனை செய்கிறார்கள். இவற்றை எல்லாம் செய்யும் அவர்களே, வாக்குகளையும் கேட்பார்கள். ஐஸ் போதைப்பொருளை ஒழிப்பதற்கான இறுதி வாய்ப்பு எனக்கூறி அவர்கள் வாக்குக் கேட்பார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.” எனவும் தெரிவித்தார்.