;
Athirady Tamil News

இந்து பௌத்த கலாசார பேரவையினால் சிங்கள கற்கைநெறியைப் பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு!! (படங்கள்)

0

இந்து பௌத்த கலாசார பேரவையினால் நடத்தப்பட்டு வருகின்ற இலவச இரண்டாம் மொழி – சிங்கள கற்கைநெறியைப் பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்திலுள்ள வடமாகாண இந்து பௌத்த பேரவை தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது.

இந்து பௌத்த பேரவையின் பொதுச்செயலாளர் தேசமாணிய எம். டி. எஸ். இராமச்சந்திரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இரண்டாம் மொழிக் கற்கையைப் பூர்த்தி செய்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் கருத்துத் தெரிவித்த இந்து பௌத்த பேரவையின் பொதுச் செயலாளர் எம். டி. எஸ். இராமச்சந்திரன், அடுத்த வருட நடுப்பகுதியில் வெளிநாட்டுப் பல்கலைக்கழகம் ஒன்றில் இலங்கை மாணவர்கள் உயர்கல்வியை கற்பதற்குரிய உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்படவுள்ளதாகக் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா கலந்து கொண்டதுடன் சிறப்பு விருந்தினர்களாக வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிரியந்த, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிறீ சற்குணராஜா ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.