;
Athirady Tamil News

நாயன்மார்கட்டு பாரதி வீதியினை உடன் புனரமைக்க கோரிக்கை!

0

யாழ்ப்பாணம் நாயன்மார்கட்டு பாரதிவீதி ஐ புரொஜெக்ட் திட்டத்தில் புனரமைப்பதற்காக தெரிவுசெய்யப்பட்டு பலவருடங்களாகியும் இதுவரை புனரமைப்பு வேலைகள் எதுவும் நடைபெறாமையினால் பிரதேசமக்கள் பெரும் அசெளகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

இவ்விடயம் தொடர்பில் அண்மையில் நடைபெற்ற வலிகிழக்கு பிரதேசசபையின் மாதந்த அமர்வில் குறித்த பகுதியின் பிரதேசசபை உறுப்பினர் நடேசபிள்ளை கஜேந்திரகுமார் சபையின் கவனத்திற்கு கொண்டுவந்ததோடு உடனடியாக பாரதி வீதியை புனரமைக்க வேண்டு எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இவ் விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-

கோப்பாய் பிரதேசசபையினால் நாயன்மார்கட்டு பாரதி வீதி ஐ புரொஜெக்ட் திட்டத்தில் உள்வாங்கப்பட்டு அளவீடுகள் அனைத்தும் செய்யப்பட்டு அதற்குரிய ஒப்பந்தமும் வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் செய்யப்பட்டு அதற்குரிய ஒப்பந்தகால அறிவித்தல் பலகையும் நாயன்மார்கட்டு சந்தி பகுதியில் நாட்டப்பட்டுள்ளது.

எனினும் இதுவரை எவ்விதமானபுனரமைப்பு பணிகளும் ஆரம்பிக்கவில்லை இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அசவ்கரியங்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

மேற்படி வேலைகள் தொடர்பில் காலத்திற்குகாலம் வீதிஅபிவிருத்தி அதிகாரசபையினருடன் பல முறை பேசியும் எந்தவிதாமான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளும் இதுவரை எடுக்கப்படவில்லை.

மக்களின் அத்தியாவசிய போக்குவரத்து தேவைகளுக்கு உகந்தவகையில் வீதியினை புனரமைக்க உடனடியாக ஆவன செய்ய வேண்டும்.

குறித்த திட்டம் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கையில் இருந்த மக்கள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர்.

குறுகிய காலப்பகுதியில் இவ்வீதி புனரமைக்கப்படாடத பட்சத்தல் மக்கள் வீதிக்கு இறங்கி போராட வேண்டிய சூழல் உருவாகும்.

எனவே இதனை தவிர்க்கும் வகையில் கோப்பாய் பிரதேச சபை தவிசாளர்,பிரதேச சபை செயலாளர் உடன் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவர்கள் கோப்பாய் பிரதேசசெயலர், அரசாங்க அதிபர், வீதிஅபிவிருத்தி அதிகாரசபையின் பொறியியலாளர் ஆகியோருடன் தொடர்புகொண்டு வீதிப்புனரமைப்பினை உடன் ஆரம்பிக்கும்படி கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.