சுன்னாகம் கரிரேஜ் றோட்டறிக் கழகத்தினர் மருந்துகளைவழங்கிவைத்தனர்!!
சுன்னாகம் கரிரேஜ் றோட்டறிக் கழகத்தினர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் நோயாளர்களின் தேவைகளை உணர்ந்து நீரிழிவு நோயாளர்களுக்கு ஒரு மாத காலத்துக்குத் தேவையான மெட்போமின், இன்சுலின் போன்ற மருந்துகளை ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபா பெறுமதியிலானவற்றை இன்று(சனிக்கிழமை) வழங்கிவைத்தனர்.
இந்த மருந்துகள் கையளிக்கும் நிகழ்வில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை திட்டமிடல் மருத்துவ உத்தியோகத்தர் மருத்துவர் ஜதுனி, தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை நோயாளர் நலன்புரிச் சங்க செயலாளர் லயன் சி.ஹரிகரன் ஆகியோரிடம் சுன்னாகம் கரிரேஜ் றோட்டரிக் கழகத் தலைவர் றோட்டேரியன் ந.தேவரூபன், பொருளாளர் றோட்டேரியன் வி.தனநாதன், உப தலைவர் றோட்டேரியன் ஜெ.கிஸ்லி ஆகியோர் வழங்கிவைத்தனர்.
நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடியில் நாடு பூராகவும் சாதாரண மருந்துகளுக்குக்கூட தட்டுப்பாட்டு நிலைமை காணப்படுகின்றது. இந்த நிலையில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் புற்றுநோய் சிகிச்சைப்பிரிவும் காணப்படுவதால் மருந்துகளின் தேவை மிகவும் பாரியளவில் காணப்படுகின்றது.