;
Athirady Tamil News

நாட்டை எங்களிடம் ஒப்படையுங்கள்!!

0

நாட்டை எங்களிடம் ஒப்படைத்தால் அதனைக் கட்டியெழுப்ப தயார் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ​ தெரிவித்துள்ளார்.

அரசியல் மேடைகளில் தம்பட்டம் அடிக்கும், மக்கள் பணத்தை கொள்ளையடிக்கும் அரசியல்வாதிகளுக்கு பாடசாலைகளுக்கு நான் பஸ்களை வழங்குவது நகைச்சுவையாக இருந்தாலும், 2022 ஆம் ஆண்டில் சில பாடசாலைகளில் பல்வேறு பயணங்களுக்கான போக்குவரத்துக் கட்டணமாக கிட்டத்தட்ட 20 இலட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும், இவ்வாறு இலவசமாக பஸ் கொடுப்பதன் மூலம் இவ்வளவு பெரிய தொகை வசூலிப்பது குறையும் எனவும் ​தெரிவித்தார்.

இல்லை, முடியாது, பார்ப்போம் என்கிற வார்த்தைகள் என்னிடம் இல்லை. எந்தவொரு சவால் விடுக்கப்பட்டாலும் உலகில் அபிவிருத்தியடைந்த நாடுகளுடன் நட்புறவை ஏற்படுத்தி மீண்டும் வலுவான, வளமான நாட்டை உருவாக்குவோம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.