இலங்கையில் போதைப்பொருள் பாவனையாளர்களின் தரவுகள் வெளியீடு – தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை!
இலங்கையில் போதைப்பொருள் பாவனை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதோடு, கைதுகளும் தொடர்ந்த வண்ணம் உள்ளது.
இந்தநிலையில், நாட்டில் போதைப்பொருள் பாவனையில் ஈடுபடுபவர்கள் தொடர்பான சமீபத்திய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை இலங்கை தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை வெளியிட்டுள்ளது.
அந்தவகையில், இலங்கையில் கிட்டத்தட்ட 120,000 பேர் ஹெரோயின் பயன்படுத்துவதாகவும், நான்கு இலட்சம் பேர் கஞ்சா பயன்படுத்துவதாகவும் இலங்கை தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் தலைவர் ஷாக்ய நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 40000 பேர் வரையில் புதிதாக சிகரெட், மது மற்றும் போதைப்பொருள் பாவனையில் இணைவதாக அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஐஸ் போதைப்பொருள் பாவனையாளர்களும் வெகுவாக அதிகரித்துள்ளதாகவும் ஷாக்ய நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.