;
Athirady Tamil News

கலிஃபோர்னியாவில் களைகட்டும் 134 வது ரோஜா அணிவகுப்பு: ஜனவரி 2, 3 தேதிகளில் நடைபெறவுள்ளது ..!!!

0

அமெரிக்காவில் உள்ள கலிஃபோர்னியா மாகாணத்தில் 134வது ஆண்டு ரோஜா அணிவகுப்பு வருகிற இரண்டாம் தேதி நடைபெறவுள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன. கலிஃபோர்னியாவில் 60 ஆண்டுகளுக்கு மேலாக பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் ரோஜா அணிவகுப்பு நடைபெறுகிறது. அந்த வகையில் 134 வது ரோஜா அணிவகுப்பு வரும் ஜனவரி 2ம் தேதி வரலாற்று சிறப்புமிக்க பசடேனா தெருக்களில் நடைபெறவுள்ளது. இதில் ரோஜா உள்ளிட்ட வண்ண மலர்கள் இயற்கை பொருட்கள் கொண்டு தயாரிக்கப்பட்ட 38 மிதவைகள் இடம்பெறவுள்ளன.

தெற்கு கலிஃபோர்னியாவை சேர்ந்த ஏராளமான தன்னார்வலர்கள் இந்த அணிவகுப்பில் பங்கேற்கவுள்ளனர். அணிவகுப்புக்கு தயாராகிடும் வகையில் மிதவைகளை உருவாக்கும் பணியில் கலைஞர்கள் பலர் ஈடுபட்டுள்ளனர். இதில் அமெரிக்கா மட்டும் அல்லாது நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளிலிருந்து கொண்டுவரப்பட்ட மலர்களும் பயன்படுத்தபட்டுள்ளன. வண்ண வண்ண பூக்களால் கார், நத்தை, காண்டாமிருகம், வண்ணத்துப்பூச்சி, ஒட்டகச்சிவிங்கி, கார்ட்டூன் கதாபாத்திரங்கள் வடிவங்கள் வடிவமைக்கப்பட்டு அவற்றை மிதவைகளில் பொருத்தும் பணியும் நடைபெற்றுவருகிறது. புத்தாண்டை ஒட்டி நடைபெறும் இந்த அணிவகுப்பை ஏராளமானோர் கண்டுகளிக்கவுள்ளனர். இதெற்கென பிரதேக ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியானது ஜனவரி 3ம் தேதி மதியம் நிறைவு பெரும் என விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.