புதிய மின்சாரக் கட்டண திருத்தத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை!!
புதிய மின்சாரக் கட்டண திருத்தத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
குருநாகலில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.