அதிமுக பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!!
அதிமுக பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று பிற்பகல் விசாரணைக்கு வருகிறது. கடந்த ஜூலை 11ம் தேதி இரண்டாவதாக நடத்தப்பட்ட அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வழக்கு விசாரணைக்கு வருகிறது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக இபிஎஸ் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ஓபிஎஸ் நீக்கப்பட்டார். இதனால் இந்தக் கூட்டத்தை செல்லாது என அறிவிக்கக் கோரி ஓபிஎஸ், பொதுக்குழு உறுப்பினர் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.
இது குறித்து விசாரணை மேற்கொண்ட உயர்நீதிமன்ற நீதிபதிகள் பொதுக்குழு கூட்டம் செல்லும் என தீர்ப்பளித்தனர். இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
அப்போது அதிமுக பொதுக்குழு கூட்டப்பட்டதே விதிமுறைகளுக்கு எதிரானது எனவும் அடுத்த விசாரணை வரும் வரை பொதுச் செயலாளர் தேர்தலை நடத்தக்கூடாது எனவும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி தரப்பினர், அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலை நடத்த மாட்டோம் எனவும் உத்தரவாதம் அளித்தது மேலும் அதிமுக தரப்பில் சமர்ப்பிக்கப்பட்ட கோப்புகள் மீது தேர்தல் ஆணையம் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதால் கட்சிப்பணிகளை சீராகச் செய்யமுடியவில்லை எனவும் மேலும் தேர்தல் ஆணையத்திற்கு உரிய உத்தரவினை பிறப்பிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் அதிமுக பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று பிற்பகல் விசாரணைக்கு வருகிறது. கடந்த ஜூலை 11ம் தேதி இரண்டாவதாக நடத்தப்பட்ட அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வழக்கு விசாரணைக்கு வருகிறது.