சீனாவின் ஏற்றுமதி 0.3% குறைந்துள்ளது !!
ஒரு வருடத்துக்கு முன்னர் இருந்ததை விட சீனாவின் ஏற்றுமதிகள் 2022 ஒக்டோபரில் டொலர் மதிப்பில் 0.3 சதவீதம் சரிந்துள்ளதாகவும் நல்ல அதிகரிப்புக்கான ஆய்வாளர்களின் எதிர்பார்ப்புகளைக் காணவில்லை என்றும் ஃபைனான்சியல் போஸ்ட் சுட்டிக்காட்டியுள்ளது.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு விற்கப்படும் பொருட்களின் மதிப்பிலும் சரிவு ஏற்பட்டுள்ளது.
சீனாவின் மிகப்பெரிய வர்த்தக பங்காளரான அமெரிக்காவுக்கான சீனாவின் ஏற்றுமதி ஒக்டோபர் மாதத்தில் 12.6 சதவிகிதம் சரிந்ததாகவும் இது மூன்றாவது மாத சரிவு என்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான ஏற்றுமதி ஒன்பது சதவிகிதம் குறைந்துள்ளது என்றும் அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஊடக அமைப்பு அறிக்கை தெரிவித்துள்ளது.
அமெரிக்காவும் ஐரோப்பாவும் அதிக பணவீக்க அழுத்தத்துக்கு மத்தியில் அந்தந்த பொருளாதாரங்களில் பண விநியோகத்தை அழுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
அமெரிக்க பெடரல் ரிசர்வ், மந்தநிலைப் போக்குகளைப் புறக்கணித்து, ஆக்கிரோஷமான வட்டி விகித உயர்வை நாடுகிறது. சீனாவில் அழுத்தம் உணரப்படுகிறது.
2023 ஆம் ஆண்டில், உலகளாவிய மந்தநிலைக்கு மத்தியில், சீனாவின் ஏற்றுமதிகள் இரண்டு சதவீதம் முதல் ஐந்து சதவீதம் வரை குறையும் என்று பிரித்தானிய பன்னாட்டு உலகளாவிய வங்கியான பார்க்லேஸ் கணித்துள்ளது.
சொத்துத் துறையில் ஏற்பட்ட சரிவு காரணமாக, செப்டம்பரில் சீனாவுக்கான 2023 GDP கணிப்பை 4.5 சதவீதத்தில் இருந்து 3.8 சதவீதமாகக் குறைத்தது.
சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்குக்கு சொத்து பங்களிக்கிறது என தி பைனான்சியல் போஸ்ட் அறிக்கை குறிப்பிடுகிறது.
சீனா ஒரு தலைமுறையில் பொருளாதார சவாலை எதிர்கொள்கிறது என்பதுடன், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தீர்மானங்கள் நாட்டின் 1.4 பில்லியன் மக்களின் வாழ்க்கையை கணிசமாக வடிவமைக்கும் என்று குறிப்பிடப்படுகிறது.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் சீனா மிகக் கடுமையான புவிசார் அரசியல் மற்றும் ஏனைய சவால்களை எதிர்கொள்ளும் என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் தனது மூன்றாவது பதவிக்காலத்தில் முன்னறிவித்ததை இது குறிக்கிறது என்று ஜியோ பொலிட்டிக்கா தெரிவித்துள்ளது.
கொரோனா வெடிப்புகளுக்கு மத்தியில், சீனாவின் பொருளாதாரம் அடுத்த காலத்தில் மிக உயர்ந்த இடத்துக்கு செல்ல வாய்ப்பில்லை என்று ஜப்பான் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
2023 ஆம் ஆண்டில் உலக சந்தையுடன் சீனா மீண்டும் இணைந்தால், நாட்டின் பொருளாதாரம் பல தசாப்தங்களில் அதன் மந்தநிலையிலிருந்து மீண்டுவிடும் மற்றும் 2023 இல் உலகளாவிய மந்தநிலைக்கான வாய்ப்புகள் குறையக்கூடும் என்று ஜப்பான் டைம்ஸ் தெரிவித்துள்ளது.