உலகிலேயே முதன்முறையாக ஒட்டகங்களுக்கென பிரம்மாண்ட ஓட்டல் அமைத்த சவூதி அரேபியா: சூடான பால்,தீவினம் உண்டு ஓய்வு எடுக்கும் ஒட்டகங்கள்..!!
ஒட்டகங்களுக்கென உலகிலேயே முதல் முறையாக சவூதி அரேபியாவில் கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்து வரும் ஓட்டலுக்கு ஒட்டக உரிமையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பாலைவன தேசமான சவூதி அரேபியாவின் ரியாத் பகுதியில் கடந்த ஆண்டு ஒட்டகங்களுக்கென டாட்மேன் என்ற ஓட்டல் திறக்கப்பட்டது. ஒன்று அல்லது இரண்டு ஒட்டகங்கள் ஒரு அறையை பகிர்ந்து கொள்ளும் விதமாக சொகுசு வசதிகளுடன் திறந்த பாலைவனத்தில் 480 அறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இங்கு திருவிழாக்கு வரும் ஒட்டகங்கள் தற்காலிக பராமரிப்புக்காக உரிமையாளர்கள் விட்டு செல்லும் ஒட்டகங்கள் என ஏராளமான ஒட்டகங்கள் பராமரிக்க பட்டுவரும் நிலையில் அவற்றிற்கு சூடான பால், தீவினம் ஆகியன உணவாக வழங்கப்படுகிறது. மேலும் ஒட்டகங்களின் முடியை கத்தரித்து அவற்றை போட்டிக்கு தயார்படுத்தும் பணி இங்கு நடைபெறுகின்றது. இந்த சொகுசு ஓட்டலில் தங்கும் ஒட்டகங்களின் உடல் நிலையையும் மருத்துவர்கள் மூலம் முறையாக கண்காணிக்க பட்டுவருகிறது.
இதற்காக 50க்கும் மேற்பட்ட ஊழியர்களும் பணியமர்த்த பட்டுள்ளனர். ஒரு இரவுக்கு ரூ.8860 வசூலிக்கப்பட்டாலும் சேவைகள் மெச்சத்தக்க வகையில் இருப்பதாகக் கூறுகின்றனர் ஒட்டக உரிமையாளர்கள். இருப்பினும் மருத்துவ பரிசோதனையில் தேர்ச்சி பெறும் ஒட்டகங்களுக்கு மட்டுமே இங்கு அனுமதி என்கிறது ஓட்டல் நிர்வாகம்.