புதுச்சேரியில் அரசின் மானியம் கிடைக்காததால் மஞ்சள் உற்பத்தி சரிந்தது: விவசாயிகள் வேதனை !!
மஞ்சள் கொத்து, கருணை கிழங்கு, சிறுவள்ளிக்கிழங்கு சாகுபடிக்கு புதுச்சேரி அரசு மானியம் தராததால் பெரும் இழப்பை சந்தித்து வருவதாக அம்மாநில விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். பொங்கல் பண்டிகையை ஒட்டி புதுச்சேரி அடுத்த மண்ணாடிபட்டி, திருக்கனூர் உள்ளிட்ட கிராமங்களில் 100ஏக்கர் வரை மஞ்சள் சாகுபடி செய்வது வழக்கம். ஆனால் பயிர்களை காக்க புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுக்காததால் தற்போது 2 ஏக்கர் மட்டுமே மஞ்சள் பயிரிட படுவதாக உழவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
கருணை, சிறுவள்ளிகிழங்குக்கும் இதே நிலை இருப்பதாக கூறுகின்றனர். நல்ல மண்வளம் குடிநீர் வசதி இருந்தும் விவசாயத்தை காக்க புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்பதே விவசாயிகளின் ஆதங்கமாக உள்ளது. எனவே வேளாண்துறை மூலம் அரசு உரிய ஆலோசனைகளை வழங்கி தங்களது பாதிப்பில் இருந்து மீள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.