மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் எதிர்ப்பு!!
தற்போதைய அரசாங்கம் நாட்டின் சட்டத்தின் மேலாதிக்கத்தை சீர்குலைப்பதாக கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கூறுவதாக அருட் தந்தை சிறில் காமினி தெரிவித்துள்ளார்.
சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நிலாந்த ஜயவர்தனவுக்கு இலங்கை பொலிஸின் உயரிய பதவியை வழங்கும் முயற்சிக்கு கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அளித்த பதில் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அருட் தந்தை சிறில் காமினி இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் உரையாற்றிய அவர், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தனவைப் பாதுகாப்பதும், அவருக்கும் சலுகைகள் வழங்கப்படுவதும் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் உண்மைத் தன்மை வெளிவராமல் தடுப்பதற்காக என தெரிவித்துள்ளார்.