;
Athirady Tamil News

இலங்கையின் நிலையை மோசமாக்கும் !!

0

இலங்கையின் தனியார் கடன் வழங்குனர்களான உலகின் சக்திவாய்ந்த முதலீட்டாளர்கள் மற்றும் ஹெட்ஜ் நிதியத்தின் வலுவான நிலைப்பாடு இலங்கையின் நிலையை மோசமாக்கும் என்றும் பொருளாதார மற்றும் அபிவிருத்தி நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

182 பொருளாதார வல்லுநர்கள் மற்றும் அபிவிருத்தி நிபுணர்கள் குழு “தி கார்டியன்” நாளிதளுக்கு வழங்கிய அறிக்கையில் மேற்குறிப்பிட்ட விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கையின் பொருளாதாரம் மீண்டு வருவதற்கு ஒரு விரிவான கடன் இரத்து மற்றும் மறுசீரமைப்பு தேவை என்றும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கையின் கடன் நெருக்கடி, வளர்ந்து வரும் உலகளாவிய கடன் நெருக்கடியைச் சமாளிக்க சர்வதேச சமூகத்தின் தயார்நிலையை சோதிக்கும் என்றும் நிபுணர்கள் குழு குறிப்பிட்டுள்ளது.

இலங்கைக்கு கடன் வழங்குவதில் உள்ள இடர்களை ஈடுகட்ட தனியார் கடன் வழங்குநர்கள் அதிக வட்டியை வசூலித்தமையால் அவர்களுக்கு பெரும் இலாபம் கிடைத்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டு ஏப்ரலில் இலங்கை கடனைத் திருப்பிச் செலுத்தாததற்கும் இந்த வட்டி மறை பங்களித்துள்ளதாகவும் அதிக வட்டி மூலம் இலாபம் பெற்ற அவர்கள் விளைவுகளை எதிர்கொள்ள தயாராக வேண்டும் என்று நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது.

திரவ சொத்துக்களில் வர்த்தகம் செய்வதற்கு உதவும் கூட்டு முதலீட்டு நிதியான ஹெட்ஜ் நிதி, நிரந்தர முதலீட்டு திட்டங்களாக அமையாமல், தேவையான போது முதலிடவும் திரும்பப் பெற்றுக்கொள்ளவும் வாய்ப்பளிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.