நம்பிக்கை வாக்கெடுப்பில் நேபாள பிரதமர் வெற்றி!!
நேபாளத்தில் சிபிஎன் மாவோயிஸ்ட் தலைவர் பிரசாந்தா டிசம்பர் 26ம் தேதி மூன்றாவது முறையாக பிரதமரானார். நேபாள காங்கிரஸ் தலைமையிலான தேர்தலுக்கு முந்தைய கூட்டணியில் இருந்து அதிரடியாக வெளியேறிய இவர், எதிர்கட்சி தலைவர் கேபி சர்மா ஒலியுடன் கூட்டணி வைத்து பிரதமரானார்.
இதனை தொடர்ந்து நாடாளுமன்றத்தில் நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 275 உறுப்பினர்களின் 138 உறுப்பினர்களின் ஆதரவு பிரசாந்தாவிற்கு தேவை. இந்நிலையில் நேற்று வாக்கெடுப்பில் பங்கேற்ற 270 உறுப்பினர்களில் 268 பேர் பிரதமர் பிரசாந்தாவிற்கு ஆதரவாக வாக்களித்து இருந்தனர்.
இரண்டு பேர் அவருக்கு எதிராக வாக்களித்தனர்.இதனை தொடர்ந்து நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரசாந்தா வெற்றி பெற்று பிரதமராக தொடர்கிறார்.