;
Athirady Tamil News

சூழகம் அமைப்பினரால் பொங்கல் பொதிகள் வழங்கல்!! ( படங்கள் இணைப்பு )

0

12 – 01 – 2023 அன்று சூழலியல் மேம்பாட்டு அமைவனத்தின் ( சூழகம் ) இணைப்பாளர் கருணாகரன் குணாளன் அவர்களின் ஏற்பாட்டில் புங்குடுதீவு மூன்றாம் வட்டாரம் சங்கத்தார்கேணியை சேர்ந்த முன்னாள் யாழ் மாவட்ட அபிவிருத்தி சபை உறுப்பினர் உயர்திரு. வே.க. சோமசுந்தரம் மற்றும் அவரது மருமகன் முன்னாள் கிராம சேவையாளர், முல்லைத்தீவு பனங்காமம் பற்று பலநோக்கு கூட்டுறவு சங்க தலைவர் உயர்திரு. நாகரத்தினம் பாக்கியநாதன் ஆகியோரின் நினைவாக அவர்களது குடும்பத்தினரின் நிதியுதவியில் புங்குடுதீவு முதலாம் வட்டாரம் மற்றும் மூன்றாம் வட்டாரப்பகுதிகளில் வாழ்கின்ற பொருளாதாரத்தில் பின்தங்கி வாழ்கின்ற 50 பொதுமக்களுக்கு தைப்பொங்கலை முன்னிட்டு பொங்கல் பொருட்கள் வழங்கப்பட்டன.

சமூக செயற்பாட்டாளர்களான சதா ( கனடா ) , குணசீலன் தம்பா , கிராமசேவகர் சிறீதரன் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.
தகவல்.. திரு.குணாளன் புங்குடுதீவு.

You might also like

Leave A Reply

Your email address will not be published.