பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு Z பிரிவு பாதுகாப்பு !!
பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு Z பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஏற்கனவே Y பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அச்சுறுத்தல் எதிரொலியாக Z பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
Z பிரிவில் 28 முதல் 33 சிஆர்பிஎப் வீரர்கள் இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. Y பிரிவு பாதுகாப்பில் 12 சிஆர்பிஎப் வீரர்கள் இருக்கும் நிலையில், z பிரிவில் 28 முதல் 33 சிஆர்பிஎப் வீரர்கள் இருப்பார்கள்.