;
Athirady Tamil News

கோல்டன் குளோப்பில் பங்கேற்ற ஹாலிவுட் பாடகி திடீர் மரணம்!!

0

கோல்டன் குளோப் விழாவில் பங்கேற்ற ஹாலிவுட் பாடகி லிசா மேரி பிரெஸ்லி உடல் நலக் குறைவால் திடீரென மரணமடைந்தார். ஹாலிவுட் பாடகியும், பாடலாசிரியுமான லிசா மேரி பிரெஸ்லி (54), கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். அதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த தகவலை அவரது தாய் பிரிசில்லா பிரெஸ்லி உறுதிப்படுத்தினார்.

அவர் வெளியிட்ட பதிவில்:
எனது மகள் லிசா மேரி பிரெஸ்லி எங்களை விட்டு பிரிந்து சென்றுவிட்டார் என்ற செய்தியை கனத்த இதயத்துடன் பகிர்ந்து கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார். லிசா மேரி பிரெஸ்லியின் மறைவுக்கு ஹாலிவுட் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். சமீபத்தில் நடைபெற்ற கோல்டன் குளோப் விழாவில் லிசா மேரி பிரெஸ்லி பங்கேற்றார். அதில் தனது மறைந்த தந்தை மற்றும் புகழ்பெற்ற பாடகர் எல்விஸ் பிரெஸ்லியின் பாடலை, தனது தாயுடன் இணைந்து பாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.