கொரோனா கட்டுப்பாடு தளர்வு- சீனாவில் இருந்து தினமும் 2.5 லட்சம் பயணிகள் வெளியேறுகின்றனர் !!
கொரோனா தொற்று பரவல் சற்று குறைந்ததை அடுத்து, சீனா தளர்வுகளை அறிவித்தது. சீனாவிற்கு வரும் பயணிகளுக்கான தனிமைப்படுத்தல் போன்ற கட்டுப்பாடுகள் ரத்து செய்ததை அடுத்து, மூன்று ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக கடந்த ஞாயிற்றுக்கிழமை சீனா தனது எல்லைகளை மீண்டும் திறந்தது.
இந்நிலையில், சீனாவில் ஜனவரி 8ம் தேதியில் இருந்து 12ம் தேதிக்கு இடையில் மட்டும் தினமும் சுமார் 4,90,000 பயணிகள் பயணம் செய்துள்ளதாக அந்நாட்டின் குடியேற்றப் பணியகத்தின் அதிகாரி தெரிவித்துள்ளார்.
இது சீனாவின் கொரோனா கட்டுப்பாடு தளர்த்தப்படுவதற்கு முந்தைய காலகட்டத்தைவிட 48.9% அதிகமாகும். ஆனால் 2019ம் ஆண்டு அளவுகளில் இது 26.2% மட்டுமே இருந்தது. அதாவது 4,90,000 எண்ணிக்கையில், 2,50,000 பயணிகள் சீனாவிற்குள் நுழைந்ததாகவும், 2,40,000 பயணிகள் சீனாவில் இருந்து வெளியேறியதாகவும் அதிகாரி கூறினார்.