நவாஸ் ஷெரீப் விரைவில் பாகிஸ்தான் திரும்புகிறார்!!
பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான நவாஸ் ஷெரீப் பதவி காலத்தில் ஊழல், முறைகேடு குற்றச்சாட்டில் விசாரணை நடந்து வந்தது.
கடந்த 2019ம் ஆண்டு உடல் நிலை பாதிப்பு காரணமாக லண்டனில் சிகிச்சை பெறுவதற்கு லாகூர் நீதிமன்றம் அவருக்கு 4 வாரங்கள் அனுமதி அளித்தது. ஆனால் லண்டன் சென்ற அவர் மீண்டும் நாடு திரும்பவில்லை. முன்னாள் பிரதமரான இம்ரான் கான் கூட்டணியுடன் பஞ்சாப் மாகாண முதல்வர் பர்வேஸ் எலாஹி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதை மத்தியில் இருக்கும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி அரசால் தடுக்க முடியவில்லை.
இந்நிலையில் லண்டனில் இருந்து நவாஸ் மற்றும் அவரது மகள் மரியம் ஆகியோர் நாடு திரும்புவது குறித்து ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 10 நாட்களில் அவர்கள் பாகிஸ்தான் திரும்புவதாகவும் செய்திகள் வௌியாகி உள்ளன.