வெளிநாட்டு பண வருகை 46 சதவீதமாக அதிகரிப்பு!!
கடந்த வருடம் வெளிநாட்டு பணியாளர்களின் பணம் அனுப்பல்கள் 46 சதவீதமாக அதிகரித்துள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இது கடந்த டிசம்பர் மாதம் 475.6 மில்லியன் அமெரிக்க டொலர் வரை அதிகரித்துள்ளதாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த தொகை கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 325.2 மில்லியன் டொலராக காணப்பட்ட நிலையில், கடந்த வருடம் 150 மில்லியன் அமெரிக்க டொடர்களால் அதிகரித்துள்ளது.