முஜிபுரின் எம்.பி பதவி இருவருக்கு சாத்தியம்?
எதிர்வரும் உள்ளராட்சி மன்றத் தேர்தலில் கொழும்பு மாநகர சபையின் மேயர் பதவிக்கு முஜிபுர் ரஹ்மான் போட்டியிடவுள்ள நிலையில் அவரின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி, ஹிருணிக்கா பிரேமச்சந்திரவுக்கு அல்லது ஏ.எச்.எம் பௌசிக்கு வழங்கப்படலாம் என்று அறியமுடிகிறது.
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானை கொழும்பு மாநகரசபை மேயர் வேட்பாளராக நியமிக்க கட்சி ஏகமனதாக தீர்மானித்துள்ளது.
கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் கட்சியின் செயற்குழு சனிக்கிழமை (14) கூடியபோதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
சஜித் பிரேமதாசவினால் முஜிபுர் ரஹ்மானின் பெயர் முன்மொழியப்பட்டதுடன் அனைத்து செயற்குழு உறுப்பினர்களாலும் அவரது பெயர் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டது.
இந்நிலையில், மேயர் வேட்பாளராக போட்டியிடுவதற்கு முஜிபுர் தனது எம்.பி பதவியை இராஜினாமா செய்யவுள்ளார்.
அந்த கட்சியின் மகளிர் அணியின் உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஹிருணிக்கா அல்லது முன்னாள் எம்.பியான ஏ.எச்.எம்.பௌசி ஆகியோரில் இருவர் தெரிவு செய்யப்படுவர் என்று தெரியவருகிறது.