60 ஆண்டுகளில் முதல் தடவையாக சீனாவின் சனத்தொகை வீழ்ச்சி!!
2021 ஆம் ஆண்டில் இருந்ததைவிட கடந்த ஆண்டில் சீனாவின் சனத் தொகை வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த 60 ஆண்டுகளில் சீனாவின் சனத் தொகை வீழ்ச்சியடைந்தமை இதுவே முதல் தடவையாகும்.
20222 ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவின் சனத்தொகை 1இ411இ750இ000 ஆக இருந்தது என சீனாவின் தேசிய புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் தரவுகள் வெளிப்படுத்தியுள்ளன. இது முந்தைய ஆண்டைவிட 850,000 குறைவானதாகும்.
கடந்த வருடம் பிறப்புகளின் எண்ணிக்கை 9.56 மில்லியனாக பதிவாகியிருந்தது. இறப்புகளின் எண்ணிக்கை 10.41 மில்லியனாக பதிவாகியிருந்தது.
இதற்கு முன்னர் இறுதியாக சீனாவின் சனத்தொகை 1960 ஆம் வீழ்ச்சியடைந்திருந்தது. கடும் பஞ்சத்துக்கு மத்தியில் அப்போது சனத்தொகை வீழ்ச்சியடைந்திருந்தது.
சனத் தொகையை கட்டுப்படுத்துவதற்காக 1980களில் ஒரு தம்பதிக்கு ஒரு பிள்ளை மாத்திரம் என்ற கொள்கையை சீனா அமுல்படுத்தியது. 2016 ஆம் ஆண்டு அக்கொள்கையை சீனா முடிவுக்கு கொண்டுவந்தது. 2021 ஆம் ஆண்டு 3 பிள்ளைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. எனினும், சீனாவின் சனத்தொகை வீழ்ச்சியை தடுக்க முடியவில்iலை.
வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, அதிக எண்ணிக்கையான பெண்கள் வேலைக்கு செல்கின்றமை, உயர்கல்வியை நாடுகின்றமை ஆகியன சனத் தொகை வீழ்ச்சிக்கு காரணங்களாக உள்ளன என பலர் கூறுகின்றனர்.