இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் மிலிந்தமொராகொட பேச்சுவார்த்தை!!
இந்தியாவிற்கான இலங்கை தூதுவர் மிலிந்த மொராகொட இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்டோவலை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.
இந்த பேச்சுவார்த்தைகளின் போது இரு தரப்பு உறவுகள் குறித்து ஆராயப்பட்டதாக இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது,இரு நாடுகளிற்கு இடையிலான பரஸ்பர மூலோபா நலன்கள் ஒத்துழைப்பிற்கான முன்னுரிமைகள் குறித்து பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளன.
இலங்கை தூதுவருக்கும் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கும் இடையிலான தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளின் ஒரு பகுதியாகவே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரின் இலங்கை விஜயத்திற்கு முன்னதாக இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.