;
Athirady Tamil News

தேர்தல் செலவீன சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது !!

0

தேர்தல் செலவீனத்தை ஒழுங்குப்படுத்துதல் சட்டமூலம் 61 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டதோடு, எதிர்க்கட்சிகளால் முன்வைக்கப்பட்ட திருத்தத்தையும் அரசாங்கம் புறக்கணித்தது.

ஒரு மாதத்துக்குப் பிற்போடுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த தேர்தல் செலவீனத்தை ஒழுங்குப்படுத்துதல் சட்டமூலத்தை விவாதத்துக்கு எடுத்து அதனை நிறைவேற்றுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, ஜி.எல்.பீரிஸ் தலைமையிலான சுயாதீனப் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி வந்த நிலையில் இச்சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இச்சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்குப் பெரும் பாதிப்பு ஏற்படும் எனவும், வெறொரு சந்தர்ப்பத்தில் இச்சட்டமூலத்தைக் கொண்டுவந்தால் முழுமையான ஆதரவை வழங்குவோம் என ஐக்கிய மக்கள் சக்தியும், தேசிய மக்கள் சக்தியும் சபையில் வலியுறுத்தியிருந்தன.

எனினும், இச்சட்டமூலம் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய ஆளுங்கட்சியினர் இச்சட்டமூலத்தால் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்குப் பாதிப்புகள் ஏற்படாதென உரையாற்றியிருந்தனர்.

எவ்வாறாயினும் இச்சட்டமூலம் மீதான குழுநிலை விவாதத்தின்போது நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ பல திருத்தங்களை முன்வைத்திருந்தார். எனினும், எதிர்க்கட்சியின் பிரதமக் கொறடா லக்ஷமன் கிரியெல்ல, “வேட்புமனு கோரப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு இச்சட்டம் பொறுந்தாது” என திருத்தம் ஒன்றை முன்வைத்திருந்தார்.

எனினும், அதனை நீதி அமைச்சர் நிராகரித்தார். இதனைத் தொடர்ந்து இச்சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு வாக்கெடுப்பை லக்ஷமன் கிரியெல்ல கோரினார்.

இதனைத் தொடர்ந்து இச்சட்டமூலம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.

ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி, பீரிஸ் தலைமையிலான சுயாதீன பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இச்சட்டமூலத்துக்கு எதிராக வாக்களித்திருந்தன. இதன்படி எதிராக 36 வக்குகளும் ஆதரவாக 97 வாக்குகள் செலுத்தப்பட்டால் அச்சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.