கடற்கரை-கும்மிடிப்பூண்டி இடையே மின்சார ரெயில் சேவை நாளை ரத்து!!
பயணிகள் பாதுகாப்பு கருதி தண்டவாளங்கள் பராமரிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக கும்மிடிப்பூண்டி யார்டில் நாளை (22-ந்தேதி) பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. இதன் காரணமாக சென்ட்ரல்-கும்மிடிப்பூண்டி இடையே மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கடற்கரை நிலையத்தில் இருந்து நாளை இரவு 10.45 மணிக்கு புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயில் (எண்:42831) முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதேபோல கும்மிடிப்பூண்டியில் இருந்து நாளை 9.55 மணிக்கு புறப்பட்டு கடற்கரைக்கு வரும் மின்சார ரெயில் (எண்: 42836) முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மூர்மார்க்கெட்டில் இருந்து கும்மிடிப்பூண்டிக்கு நாளை இரவு 11.20 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் பொன்னேரி-கும்மிடிப்பூண்டி இடையே மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கும்மிடிப்பூண்டியில் இருந்து மூர்மார்க்கெட்டிற்கு 23-ந்தேதி அதிகாலை 3.50 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் கும்மிடிப்பூண்டி-பொன்னேரி இடையே மட்டும் ரத்து செய்யப்படுவதாக சென்னை ரெயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.