போலி பதிவு இலக்கத்துடன் பயன்படுத்தப்பட்ட ஜீப் கைப்பற்றப்பட்டது!
சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்டு போலி பதிவு இலக்கத்துடன் பயன்படுத்தப்பட்ட சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியான சொகுசு ஜீப்புடன் பிலியந்தலை பொகுந்தர பொருளாதார நிலையத்துக்கு அருகில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாணந்துறை வலான மத்திய ஊழல் ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
கொழும்பில் உள்ள பிரபல தனியார் தோட்ட நிறுவனம் ஒன்றின் ஜீப் வண்டியின் பதிவு இலக்கம் குறித்த ஜீப்பில் பொருத்தப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, வாகன மோசடி தொடர்பில் பொலிஸாரால் முன்னர் கைது செய்யப்பட்ட கம்பஹாவில் வாகன விற்பனை நிலையம் ஒன்றை நடத்தும் நபர் தொடர்பிலும் பல தகவல்கள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.