;
Athirady Tamil News

வரலாற்று சிறப்புமிக்க குசனார்மலைக்கு சாணக்கியனின் அழைப்பில் சுவிஸ் தூதுவர் விஜயம்!!

0

மட்டக்களப்பு, ஏறாவூர்ப்பற்று பிரதேசசபைக்குட்பட்ட கரடியன்குளம் பகுதியில் தொல்லியல் திணைக்களத்தினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள வரலாற்று சிறப்புமிக்க குசனார்மலைக்கு சுவிஸ் தூதுவர் இன்று (26) புதன்கிழமை மாலை விஜயம் செய்தார்.

கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்துள்ள சுவிஸ் தூதுவர் டொமிங்க் பேர்கிலர் மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் விஜயத்தினை மேற்கொண்டுள்ளார்.

இதன்போது மாவட்டத்தில் தொல்லியன் செயலணி ஊடாக தமிழர்களின் பாரம்பரிய இடங்களை தொல்லியல் திணைக்களம் கையகப்படுத்துவதற்கு முன்னெக்கப்படும் செயற்பாடுகள் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனால் தூதுவரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதை தொடர்ந்து இந்த விஜயத்தினை முன்னெடுத்தார்.

குசனார்மலைக்கு வருதைந்த தூதுவரை பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மற்றும் ஆலய நிர்வாகத்தினர் மற்றும் கிராம மக்கள் வரவேற்றனர்.

அதனை தொடர்ந்து மலையில் உள்ள முருகன் ஆலயத்தில் விசேட பூஜைகள் நடைபெற்றதுடன் தூதுவருக்கு ஆசியும் வழங்கப்பட்டது.

அதனை தொடர்ந்து குசனார்மலையின் நிலைமைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதுடன் அப்பகுதியில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் ஆராய்ந்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.