மார்ச் மாதம் 3, 4ஆம் திகதிகளில் கச்சதீவு பெருவிழா!!
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவிற்கான முன்னாயத்தக் கூட்டம் இன்று(27) காலை இடம்பெற்றது.
யாழ் மாவட்ட செயலாளர் அ.சிவபாலசுந்தரன் தலைமையில் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா 2023 மார்ச் மாதம் 3, 4ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது.
திருவிழாவில் 4500 இலங்கை பக்தர்களையும், 3500 இந்திய பக்தர்களையும், மதகுருமார்கள் உள்ளடங்களாக 1000 சிறப்பு அதிதிகளையும் அனுமதிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இக் கூட்டத்தில் இந்தியத் தூதரக அதிகாரிகள் ராம் மகேஸ் , குரு முதல்வர் ஜெபரட்ணம் அடிகளார், வடமாகாண கடற்படைத் தளபதி தென்னக்கோன் மற்றும் யாழ். மாவட்ட கடற்படைத் தளபதி, இராணுவத்தினர், பொலிசார், மாவட்ட செயலக அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.