சீன அவுஸ்திரேலிய உறவுகள் சரியான திசையில் செல்கின்றன- சீன ஜனாதிபதி!!
சீன அவுஸ்திரேலிய உறவுகள் சரியான திசையில் செல்கின்றன என சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலிய தினத்தை முன்னிட்டு ஆளுநர் நாயகத்திற்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
சீன ஜனாதிபதியின் செய்தி கிடைத்ததை அவுஸ்திரேலிய ஆளுநர் நாயகம் உறுதி செய்துள்ளார்.
இரு நாடுகளும் தங்களின் கடந்தகாலம் குறித்து மீளாய்வு செய்துள்ளன எதிர்காலம் குறித்து ஆராய்ந்துள்ளன என தனது செய்தியில் தெரிவித்துள்ள சீன ஜனாதிபதி இருநாடுகளின் உறவை முன்னேற்றகரமானதாக்குவதற்காக சரியான திசையை நோக்கி தீவிரமுயற்சிகள் இடம்பெறுகின்றன எனவும் தெரிவித்துள்ளார்.