வாக்காளர் ஒருவருக்கான செலவு 20 ரூபாய்!!
தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டமூலத்திற்கு அமைவாக, வேட்பாளரினால் ஒரு வாக்காளருக்காக செலவிடப்படும் தொகையை 20 ரூபாவாக அதிகரிக்க தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
வாக்காளர் ஒருவருக்கு செலவிடக்கூடிய தொகையை 15 ரூபாவாக அறிவிக்க ஆணைக்குழு அண்மையில் தீர்மானித்திருந்தது. எனினும், தற்போது அத்தொகை 20 ரூபாவாக அதிகரிக்கப்படுகிறது.
இதேவேளை, உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வாக்குச்சீட்டுகளை அச்சீட்டு பணிகளுக்காக அரச அச்சகத்திற்கு அனுப்பியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.