அகவை நாளில், வாழ்வாதார உதவிகளை அள்ளிக் கொடுத்தார் கனடா வாழ் புங்குடுதீவு அன்பழகன்.. (படங்கள், வீடியோ)
அகவை நாளில், வாழ்வாதார உதவிகளை அள்ளிக் கொடுத்தார் கனடா வாழ் புங்குடுதீவு அன்பழகன்.. (படங்கள் வீடியோ)
##############################
சிரிப்புடன் நீர் சிரமத்தை கடக்கணும்..
சிறப்புடன் நீர் நூறு வருஷம் வாழனும்..
குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும்
நிறைவாக நீர் வாழ்ந்திட வேண்டும்..
மகிழ்வான தருணங்கள் மலரட்டும்
இனிமையாக.. நெகிழ்வான நேரங்கள்
நிகழட்டும் இளமையாக..
எண்ணங்களும் ஏக்கங்களும்
எல்லை தாண்டி வெல்லட்டும்..
கையிட்டு செய்பவைகள்
கையில் வந்து சேரட்டும்..
வலிமையான வரிகளால்
வாழ்த்திட தெரியவில்லை..
எனவே மனமார வாழ்த்துகின்றோம்..
இன்றைய நாளில் புங்குடுதீவில் பிறந்து, கனடா நாட்டில் பிறந்தநாள் காணும் அன்பழகன் என அன்புடன் அழைக்கப்படும், திரு. கந்தையா அன்பழகன் அவர்கள், தனது குடும்பத்தின் நிதிப் பங்களிப்பில் “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினூடாக” வவுனியா எல்லைக் கிராமமொன்றில், அக்கிராமங்களில் வாழும் தேவையுடைய மக்களுக்கு வாழ்வாதார உதவியாக பெறுமதியான உலருணவுப் பொதிகளும், கற்றல் உபகரணங்களும், பயன்தரு நல்லின தென்னைமரக் கன்றுகளும் வழங்கி வைத்தனர்.
தான் பிறந்து வளர்ந்த ஊரான புங்குடுதீவின் மண் மீதும், புங்குடுதீவு மக்கள் மீதும் தீராத அன்பு கொண்டவரான இவரும், இவரது துணைவியாரும் கனடா நாட்டில் ஊர் சங்கத்தில் தங்களை இணைத்து பல தொண்டுகளை செய்து வருபவர்கள் என்பதுடன், பல சமூக,சமய அமைப்புக்களில் பங்கெடுத்து சமுதாயப் பணிகளை தொடர்ந்து ஆர்வத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் திரு.திருமதி சந்திரா அன்பழகன் குடும்பத்தினர் திரு.அன்பழகன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் ஊடாக கேட்டுக் கொண்டதுக்கு இணங்க, இன்றையதினம் வன்னி கிராமமொன்றில் வாழ்வாதார உதவிகளை வழங்கி வைத்தனர்.
திரு.அன்பழகன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது மனைவி சந்திரா, மகன் அஜந்தன், மகள் மதுஷா ஆகியோர் வழங்கிய நிதிப் பங்களிப்பில் மேற்படி நிகழ்வு மாணிக்கதாசன் நற்பணி மன்றம் ஊடாக மேற்படி நிகழ்வு நடைபெற்றது.
மேற்படி நிகழ்வுக்கான ஏற்பாட்டை மாணிக்கதாசன் நற்பணி மன்ற சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளரான கனடாவில் வதியும் திரு.குணராஜா உதயராஜா ஏற்பாடு செய்திருந்ததுடன், தனிப்பட்ட விஜயமாக இலங்கை சென்றிருந்த அதேவேளை இந்நிகழ்வில் குடும்பமாகக் கலந்து சிறப்பித்து இருந்தனர்.
இந்நிகழ்வை தேசிய சமூக நீர் வளங்கள் திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர், திரு.குமார் டினேஷ் அவர்கள் தொகுத்து வழங்க, வவுனியா பிரதேச செயலக சமுர்த்தி அமைப்புக்களின் தலைவரும், வவுனியா பிரதேச செயலக கிராம அபிவிருத்தி சங்கம் மற்றும் மாதர் சங்க சமாசனத்தின் தலைவருமான திரு. துரைராசா சுதாகர் விருந்தினர்களையும் கலந்து கொண்டோரையும் வரவேற்று வரவேற்பு உரையாற்ற, கற்குளம் மூன்று பிரதேச கிராம அபிவிருத்தி சங்க தலைவர் திரு.குருபாதம் குமணன் முன்னிலை வகிக்க நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் மாணிக்கதாசன் நற்பணிமன்ற தலைவரும், புங்குடுதீவு மண்ணின் மைந்தருமான சமாதான நீதவான் திரு.எஸ்.கே. சண்முகலிங்கம் பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பிக்க, மாணிக்கதாசன் நற்பணி மன்ற சர்வதேச விவகாரங்களுக்கான இணைப்பாளர் திரு.உதயராஜா, மன்ற பொருளாளர் செல்வி.ரம்மியா செல்வராஜா, மன்ற வவுனியா மாவட்ட இணைப்பாளர் திரு.பெருமாள் சஞ்சீவன், மன்ற நிர்வாகசபை உறுப்பினர்களில் ஒருவரான திருமதி. பவளராணி நவரெட்ணம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து சிறப்பிக்க, இந்நிகழ்வானது மாணிக்கதாசன் நற்பணி மன்ற வவுனியா மாவட்ட இணைப்பாளர் திரு.பெருமாள் சஞ்சீவன் ஆகியோருடன், கிராமிய ஒருங்கிணைப்பாளர்கள், விருந்தினரின் பங்குபற்றுதலுடன் சிறப்பாக நடைபெற்றது.
திரு.அன்பழகன் தனது பிறந்தநாளினை “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” ஒழுங்கமைப்பில் வவுனியா கிராமத்தில் வாழ் சிறுவர், சிறுமிகளோடு கேக் வெட்டி “பெறுமதியான உலருணவுப் பொதிகள், கற்றல் உபகரணங்கள் மற்றும் பயன்தரு தென்னைமரக் கன்றுகள்” எனப் பல்வேறு உதவிகள் வழங்கி மகிழ்ச்சியோடு கொண்டாடினார்.
திரு. அன்பழகன் அவர்களின் பிறந்தநாள் நிகழ்வினை அவரது குடும்பத்தின் நிதிப்பங்களிப்பில் தாயக உறவுகளுக்கான வாழ்வாதார உதவி வழங்களுடன் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினால் சிறப்பான ஒழுங்கமைப்பில் கொண்டாடப்பட்டது. திரு.அன்பழகனின் பிறந்தநாள் கொண்டாட்டம் சிறுவர்களால் கேக் வெட்டி பிறந்த நாள் பாட்டுப் பாடி விமர்சையாக கொண்டாடப்பட்டது.
பல சிறுவர் சிறுமியர்கள், அவர்களின் பெற்றோர், அக் கிராமத்தவர்களென பலரும் கலந்து கொண்டு திரு.அன்பழகனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்ந்தார்கள். நிகழ்வில் கலந்து கொண்ட சிறுவர் சிறுமியர்களுக்கு உட்பட அனைவருக்கும் சிற்றுண்டிகள் வழங்கப்பட்டது. அத்துடன் பெறுமதியான உலருணவுப் பொதிகளும், கற்றல் உபகரணங்களும் பயன்தரு நல்லின தென்னைமரக் கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டது.
இதேவேளை விசேட நிகழ்வாக திரு.அன்பழகன் அவர்களுடைய பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு விதமான கறிகள், வடை, பாயாசத்துடன் விசேட மதிய உணவு விருந்துபசாரம் வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
அந்தவகையில் இன்றைய நாளில் திரு.அன்பழகன் அவர்களது பிறந்தநாள் ஆகிய இன்றையதினம் பிறந்த நாள் கொண்டாட்டத்தோடு பிறந்தநாளை நிறைவு செய்யாமல் வாழ்வாதார நிலையில் மிகவும் பாதிக்கப்பட்ட விசேட தேவையுடையோர், வயோதிபர்கள், நாளாந்த வருமானத்தை இழந்து தனித்து வாழ்வோர் என பலதரப்பட்ட சூழ்நிலையில் வாழ்வோருக்கு திரு.அன்பழகன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது மனைவி சந்திரா, மகன் அஜந்தன், மகள் மதுஷா ஆகியோர் “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்திற்கு” வழங்கிய நிதிப்பங்களிப்பில் பெறுமதியான உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டதுடன், கற்றல் உபகரணங்களும் ,பயன்தரு நல்லின தென்னைமரக் கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டது..
இதேவேளை நிகழ்வில் கலந்து கொண்ட பொதுமக்கள் தமது நடனக் கலைகளை வெளிப்படுத்த வேண்டுமென விரும்பிக் கேட்டதுக்கு இணங்க, அக்கிராம இளையோர், சிறியோரின் நடன நிகழ்வுகளும் நடைபெற்றது சிறப்பம்சமாகும்.
இதேவேளை அனைத்து வாழ்வாதார உதவிகளையும் திரு.எஸ்.கே.சண்முகலிங்கம், திரு.கனடா உதயராஜா, திருமதி.ரதீஸ்வரி உதயராஜா, செல்வி.ரம்மியா செல்வராஜா, செல்வி.மணிசேகரன், திருமதி.பவளராணி நவரெட்ணம், திரு.சஞ்சீவன், மற்றும் கிராம முக்கியஸ்தர்கள் சிலரும் வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது..
மேற்படி நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து சிறப்பித்த கனடாவில் வதியும் திரு.திருமதி. உதயராஜா ரதீஸ்வரி தம்பதிகளிடம் அக்கிராமத்தில் மிகவும் ஏழ்மை நிலையில் நோய்வாய்ப்பட்டு உள்ள சிலருக்கும் தனிப்பட்ட ரீதியில் நிதியுதவி வழங்கி வைத்தமைக்கு அப்பயனாளிகளுடன் இணைந்து மாணிக்கதாசன் நற்பணி மன்றம் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.
இவ்வாறான பல்வேறுபட்ட சமூகப்பங்களிப்புடன் திரு.அன்பழகன் அவர்களுடைய பிறந்தநாளை மாணிக்கதாசன் நற்பணி மன்றம் தாயகத்து உறவுகளோடு அர்த்தமுள்ள அறப்பணிகளோடு ஏற்பாடுகளை முன்னெடுத்து செய்துள்ளது.
இன்றைய நாளில் இனிய பிறந்த நாளைக் கொண்டாடும் திரு.அன்பழகன் அவர்களை “சமூக சேவையில் சிறந்து விளங்கி, மற்றவர்களின் நலனை தன்னலமாக கொண்டு, பல்லாண்டு காலம் சீரும் சிறப்புடன் வாழ்க வாழ்கவென” மாணிக்கதாசன் நற்பணி மன்றம் தாயகத்து உறவுகளோடு இணைந்து வாழ்த்துகிறது.
அத்தோடு திரு.அன்பழகன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மேற்படி வாழ்வாதார உதவிகளுக்கு நிதிப் பங்களிப்பு வழங்கிய அவருக்கும், அவரது மனைவி சந்திரா, மகன் அஜந்தன், மகள் மதுஷா ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகளையும் பயனாளர்களுடன் இணைந்து மாணிக்கதாசன் நற்பணி மன்றம் மனதாரத் தெரிவித்துக் கொள்கிறது.
நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்.. -என்றும்
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..
தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.
28.01.2023
அகவை நாளில், வாழ்வாதார உதவிகளை அள்ளிக் கொடுத்தார் கனடா வாழ் புங்குடுதீவு அன்பழகன்.. (வீடியோ)
“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்..
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1
§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§
“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” வீடியோக்கள் அனைத்தையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்.. https://www.youtube.com/channel/UCcqovJhy5b-K7R3CrQz3dLg/videos