தேர்தல் நடத்துவதில் ஏற்படவுள்ள பாரிய சிக்கல் – தோல்வியில் முடிந்த பேச்சுவார்த்தை!
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது மிகவும் பிரச்சினைக்குரிய சூழ்நிலையாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தேர்தல் பணிகளுக்கு தேவையான எரிபொருள் கிடைக்காததாலேயே தேர்தல் நடத்துவதில் பாரிய சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் தேர்தலுக்கு தேவையான எரிபொருளை பெறுவது தொடர்பாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. எனினும், தேர்தல் ஆணையம் கோரியபடி எரிபொருளை வெளியிட முடியாது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஆகவே தேர்தல் பணிகளுக்காக மாவட்ட தேர்தல் அலுவலகங்களில் பயன்படுத்துப்படும் வாகனங்களுக்கு போதியளவு எரிபொருள் இல்லாததால், பல மாவட்டங்களில் தேர்தல் நடவடிக்கைகளுக்கு கடும் இடையூறு ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தேர்தலை நடத்துவதற்கு தடைகளை நீக்குமாறு கோரி தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.