கெஹலியவின் பயணத்தடை நீக்கம்!!
சுகாதாரத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவுக்கு விதிக்கப்பட்டிருந்த வௌிநாட்டுப் பயணத்தடையை தற்காலிகமாக நீக்க உயர்நீதிமன்றம் உத்தவரவிட்டுள்ளது.
நாட்டுக்கு தேவையான மருந்து பொருள்களைக் கொள்வனவு செய்வதற்காக மூன்று மாநாடுகளில் கலந்துகொள்ள வேண்டுமென்பதால் இவ்வாறு தற்காலிகமாகப் பயணத்தடை நீக்கப்பட்டுள்ளது.
பெப்ரவரி 21ஆம் திகதி முதல் மே 20ஆம் திகதி வரையிலான காலப் பகுதிக்குள் இவ்வாறு பயணத்தடை நீக்கப்பட்டுள்ளது.
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்துக்கு தேவைப்படாத சந்தர்ப்பம் ஒன்றில் 600 ஜி.ஐ. குழாய்களைக் கொள்வனவு செய்து அரசாங்கத்துக்கு நட்டம் ஏற்படுத்தியக் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு விசாரணையில் கெஹலியவுக்கு வௌிநாட்டுப் பயணத்தடை விதிக்கப்பட்டிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.