அதானி நிறுவனத்தின் பதவியை உதறினார் மாஜி பிரதமரின் தம்பி!!
இங்கிலாந்து முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சனின் இளைய சகோதரர் லார்ட் ஜோ ஜான்சன், அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்துடன் தொடர்புடைய நிறுவனத்தின் இயக்குநர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
லண்டனை தலைமை இடமாக கொண்ட எலாரா கேபிடல் பிஎல்சியின் இயக்குநராக 51 வயதான லார்ட் ஜோ ஜான்சன் கடந்த ஆண்டு ஜூன் மாதம் நியமிக்கப்பட்டார். தற்போது அதானி நிறுவனம் மீதான முறைகேடு புகார்கள் வெளியாவதை தொடர்ந்து எலாரா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.