கர்நாடக சட்டசபை தேர்தல்: பா.ஜ.க மேலிட இணை பொறுப்பாளராக அண்ணாமலை நியமனம்- ஜே.பி. நட்டா அறிவிப்பு!!
கர்நாடக சட்டசபைக்கு இந்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது பசவராஜ் பொம்மை தலைமையில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. மீண்டும் ஆட்சியை கைப்பற்ற பாஜக தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டது. 224 தொகுதிகளை கொண்ட அந்த மாநிலத்தில் 150 தொகுதிகளை இலக்காக கொண்டு பாஜக தேர்தல் வேலைகளை முடுக்கிவிட்டுள்ளது.
அந்த மாநிலத்தின் தேர்தல் பொறுப்பாளர்களாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோரை நியமித்து அகில இந்திய பாஜக தலைவர் ஜே.பி. நட்டா உத்தரவிட்டுள்ளார். அண்ணாமலை கர்நாடகாவில் உடுப்பி மற்றும் சிக்மகளூர் மாவட்டங்களில் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றியவர். தனது பதவிகாலத்தில் நேர்மையான அதிகாரி என்று பெயர் வாங்கியவர். அவரது துணிச்சலான நடவடிக்கையால் கர்நாடக சிங்கம் என்று அழைக்கப்பட்டார்.
உடுப்பி கடலோர பகுதிகளில் இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களிடையே நட்சத்திர போலீஸ் அதிகாரியாக விளங்கியவர். எனவே தற்போதைய தேர்தலில் அண்ணாமலைக்கு இணை தேர்தல் பொறுப்பாளர் பதவியை பாஜக மேலிடம் வழங்கி இருக்கிறது.