;
Athirady Tamil News

துருக்கி சிரியா நிலநடுக்கம் – பலியானோர் எண்ணிக்கை 20 ஆயிரத்தைக் கடந்தது!!

0

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்களால் ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகி உள்ளன. பல்வேறு நாடுகளின் ஆதரவுடன் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இடிபாடுகளில இருந்து கொத்துக்கொத்தாக சடலங்கள் மீட்கப்படுவதால் உயிரிழப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், நிலநடுக்கத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 20 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இடிபாடுகளில் சிக்கி பலத்த காயங்களுடன் உயிருக்குப் போராடுபவர்கள் மீட்கப்பட்டு அவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. இடிபாடுகளில் இருந்து மேலும் பலரை மீட்கும் பணிகளில் மீட்புப் படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

நிலநடுக்கத்ததால் வீடுகளை இழந்தவர்களில் பலர் அரசு அமைத்துள்ள கூடாரங்கள், மைதானங்கள் மற்றும் பிற தற்காலிக தங்குமிடங்களில் தங்கியிருக்கின்றனர். இந்தியா உள்பட 12-க்கும் மேற்பட்ட நாடுகள் தங்கள் நாடுகளின் பேரிடர் மீட்பு படைகளையும், நவீன எந்திரங்களையும், ஆம்புலன்ஸ் வாகனங்களையும், மருந்து பொருட்களையும், மோப்ப நாய்கள் அடங்கிய வல்லுனர் குழுவையும் அனுப்பி வைத்துள்ளன.

அந்தவகையில் 1.10 லட்சத்துக்கு மேற்பட்ட மீட்புப் படையினர் நிலநடுக்கம் பாதித்த பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன் டிராக்டர்கள், கிரேன்கள், புல்டோசர்கள் உள்பட சுமார் 6 ஆயிரம் வாகனங்கள் களத்தில் உள்ளதாக துருக்கி பேரிடர் மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.