கண்டியில் வெளிநாட்டுப் பறவைகள் பூங்கா !!
கண்டி- ஹந்தானையில் அமைக்கப்பட்டுள்ள இலங்கையின் முதலாவது வெளி நாட்டுப் பறவைகள் பூங்கா, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் நாளை (20) மாலை 3 .00 மணிக்கு திறந்து வைக்கப்பட உள்ளது.
ஹந்தானை பிரதேசத்தில் தேயிலை ஆராய்ச்சி நிலையத்திற்கு அருகாமையில் சுமார் 27 ஏக்கர் நிலப்பரப்பில் இப் பறவை பூங்கா நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
பாரிய அளவிலான கூடுகளுக்குள் பறவைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதுடன் பறவைகளுக்கு அன்றாட நடவடிக்கைளுக்கு ஏற்றவாறு இப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
490 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள இப் பூங்கா எதிர்வரும் 23ஆம் திகதி முதல் மக்கள் பார்வைக்காக திறக்கப்பட உள்ளது.